வேளாண் கடன் தள்ளுபடி குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில் , தற்போதைய சூழலில் இந்திய அரசு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தில் இல்லை. இதில் பட்டியிலன, பழங்குடி விவசாயிகள் வாங்கிய கடனும் அடக்கம் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வேளாண்துறையினருக்கு பயிர்கடன் முறையாக சென்று சேர அரசு சார்பில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அவர் பட்டியலிட்டார்.
ரூ.3 லட்சம் வரை வாங்கிய கடனுக்கு வட்டிக்குறைப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை போன்ற திட்டங்கள் சமூகத்தில் பின்தங்கிய விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் - விரையும் மத்திய குழு