தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சைடஸ் காடில்லா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அரசு நிபுணர் குழு ஒப்புதல் - சைடஸ் காடில்லா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அரசு நிபுணர் குழு ஒப்புதல்

சைடஸ் காடில்லா கரோனா தடுப்பூசியை அவரச கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Zydus Cadila
Zydus Cadila

By

Published : Aug 20, 2021, 6:45 PM IST

அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் காடில்லா நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மூன்று டோஸ் கொண்ட இந்தத் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்திய மருந்தக இயக்குனரின் இறுதி ஒப்புதலுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கோவிட்-19 தொற்று தடுப்பூசிகளில், பிளாஸ்மிட் டி.என்.ஏ. முறையில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி சைடஸ் காடில்லாதான் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் பட்டேல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மார்டனா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய ஐந்து தடுப்பூசிகளுக்கு இதுவரை அவரச பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய என மூன்று கோவிட்-19 தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஆறாவது தடுப்பூசியாக சைடஸ் காடில்லாவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:மலைக்க வைக்கும் விலை - இதுதான் குஜராத் 'கோல்ட் ஸ்வீட்'

ABOUT THE AUTHOR

...view details