தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2022-க்கான பத்ம விருது: பரிந்துரையை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு! - மத்திய உள்துறை அமைச்சகம்

2022ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Padma Award
பத்ம விருது

By

Published : Jun 11, 2021, 2:00 PM IST

டெல்லி: இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகிறது.

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை,சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம். . பரிந்துரை தொடர்பான சந்தேகங்கள் குறித்து www.mha.gov.inஎன்ற இணையதள முகவரியில் விவரங்களை பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் கொடுக்கப்படவுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details