தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் 54 சீன செயலிகளுக்குத் தடை - இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்துலாக இருந்ததாக தகவல்

இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய 54 சீனா செயலிகள் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

54 சீன செயலிகளுக்கு தடை
54 சீன செயலிகளுக்கு தடை

By

Published : Feb 14, 2022, 11:33 AM IST

டெல்லி:இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகச் சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது எனவும், அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் Viva Video Editor, Beauty Camera, Sweet Selfie HD, AppLock, Dual Space Lite உள்ளிட்ட செயலிகளும் அடங்கும்.

மேலும், சென்ற வருடம் சீன செயலிகளான டிக்டாக், பப்ஜி, யூசி பிரவுசர் உட்பட 267 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இவை தடை செய்யப்படுவதாக மத்திய அரசு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்துக்களைக் காப்பது நமது கடமை - பாக். ராணுவத் தலைமைத் தளபதி

ABOUT THE AUTHOR

...view details