தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசிடம் திட்டம் இல்லை!

டெல்லி : இந்திய மக்கள் அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விநியோகச் செயல் உத்திகளை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசிடம் திட்டம் இல்லை !
கோவிட்-19 தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசிடம் திட்டம் இல்லை !

By

Published : Nov 11, 2020, 2:47 PM IST

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர், பயோயென் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்த கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசி 90 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாகவும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "ஃபைசர் மருந்து உற்பத்தி நிறுவனமானது, ஒரு நம்பிக்கைக்குரிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இருப்பினும், அதனை ஒவ்வொரு இந்தியரிடமும் கொண்டு சேர்க்கப் போதுமான தளவாடங்கள் நம்மிடையே இல்லை.

இந்திய அரசு உடனடியாக கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்திற்கான திறன் சார்ந்த உத்தியை வரையறுக்க வேண்டும். அது ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி சென்றடைவதற்கான வழியைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் இயங்கிவரும் குளிர் சாதன வசதி கொண்ட எந்தவொரு லாஜிஸ்டிக் நிறுவனத்திற்கும் கோவிட்-19க்கான ஃபைசர் தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வரும் திறன் இல்லை. அதற்கு மைனஸ் 70 டிகிரி குளிர்நிலை தேவைப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details