தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜாரத்தில் WHO அமைப்பின் சர்வதேச மையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ஆயுஷ் அமைச்சகம்

குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை

By

Published : Mar 10, 2022, 6:44 AM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.

இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேச சுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகை செய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக் கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.

2020ஆம் ஆண்டு 13 நவம்பர் அன்று ஐந்தாவது ஆயுர்வேத தினத்தையொட்டி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதோனம், இந்தியாவில் இந்த மையம் அமைக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:1999 இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details