தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - அமைச்சகத்தின் பதில் என்ன? - CoWIN hacked

கோவின் தளத்தில் எவ்வித ஹேக்கிங்கும் நடைபெறவில்லை என்றும், தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CoWIN
கோவின்

By

Published : Jun 11, 2021, 1:04 PM IST

டெல்லி: மத்திய அரசால் கரோனா தடுப்பூசி போடும் பணிக்காக இணையதளம் கோவின் தொடங்கப்பட்டது. இந்த தளத்தில் இதுவரை 150 மில்லியன் மக்கள் ரெஜிஸ்டர் செய்துள்ளனர்.

இந்த தகவல் அனைத்தும் இணையத்தில் கசிந்துவிட்டதாகக் கடந்த சில நாள்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது. மக்களின் முகவரி உட்பட அனைத்து தகவல்களும் கசிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், கோவின் தளம் ஹேக் செய்யப்படவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "கோவிட் தளத்தில் எவ்வித ஹேக்கிங்கும் நடைபெறவில்லை. மக்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது. இவ்விவகாரம் குறித்து விசாரிக்க Computer Emergency Response Team அமைப்பிடம் உத்தரவிட்டு இருக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details