தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஜூலை18இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக டெல்லியில் வரும் 18ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

Monsoon session of Parliament
Monsoon session of Parliament

By

Published : Jul 14, 2021, 2:34 PM IST

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 18ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்புவிடுத்துள்ளார். இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

மழைக்காலக் கூட்டத்தொடர் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் சுமுகமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க:இரக்கமில்லா கரோனா- பட்டினி அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details