தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறது மத்திய அரசு': சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்! - சீனா அக்கிரமிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்

லடாக் எல்லைப்பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்துவருகிறது என்றும்; இதை மத்திய அரசு மறுத்து நாட்டுக்குத்துரோகம் இழைக்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Jun 10, 2022, 6:01 PM IST

டெல்லி: இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருவது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க ராணுவ அலுவலர் ஒருவர் லடாக் எல்லைப்பகுதிகளில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், இதை மேற்கோள்காட்டி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக் எல்லைப்பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்துவருவது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதை மத்திய அரசு மறுப்பதன் மூலம் நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறது" என்று கடுமையாக சாடியுள்ளார்.

அதேவேளையில், இந்திய வெளியுறவுத்துறை கிழக்கு லடாக் மற்றும் எல்லைப்பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், எல்லைப் படைகளை திரும்பப்பெறுவது மற்றும் பிரச்னைகளுக்குப் பரஸ்பரம் தீர்வு காண்பது குறித்து இந்தியா-சீனா இடையே அடுத்த கட்ட ராணுவப்பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்தியா ராணுவம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு... கர்நாடகாவில் திருப்பம்...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details