உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர்தான், தலைமை நீதிபதி பதவியில் அமரவைக்கப்படுவார். மேலும், ஓய்வுபெறும் நீதிபதியின் பரிந்துரையைச் சட்ட அமைச்சர் கேட்பார் எனக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதியின் பரிந்துரை சட்ட அமைச்சரிடம் கொடுக்கப்படும். அவர் அதனை, தலைமை நீதிபதியை நியமனம்செய்வதில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பிரதமரிடம் கொடுப்பார்.