தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்! - ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பணப் பரிவர்த்தனை

மருத்துவமனை, நர்சிங் ஹோம், கரோனா சிகிச்சை மையங்களில், சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம், அதற்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

cash payment of over Rs 2 lakh for COVID-19 treatment
cash payment of over Rs 2 lakh for COVID-19 treatment

By

Published : May 9, 2021, 8:11 AM IST

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நர்சிங் ஹோம், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாளொன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை இது நடைமுறைபடுத்தபடும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அலுவலர்கள் கூறுகையில், மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details