டெல்லி: இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரும்பு உற்பத்தியின் ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள சர்க்கரையின் விலை நிலைத்தன்மையையும், நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் சமநிலைப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக, 2022-23 சர்க்கரைப் பருவத்தில் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை சர்க்கரை ஏற்றுமதியை அரசு அனுமதித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதியை ‘கட்டுப்படுத்தப்பட்ட’ பிரிவின் கீழ் சேர்ப்பதை 2023 அக்டோபர் 31 வரை வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்ககம் ஏற்கனவே நீட்டித்துள்ளது.
30.09.2023 நிலவரப்படி, சுமார் 275 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உள்நாட்டு உபயோகத்திற்காகவும், 50 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடவும், 30.09.2023 நிலவரப்படி, மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையின் இருப்பு அளவு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். 2022-23 சர்க்கரைப் பருவத்தின் தொடக்கத்தில், கரும்பு உற்பத்தியின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி,60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரும்பு உற்பத்தி அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின் அடிப்படையில், அனுமதிக்கப்படும் சர்க்கரை ஏற்றுமதியின் அளவு மறுபரிசீலனை செய்யப்படும்.
2021-22 சர்க்கரை பருவத்தின் போது, இந்தியா 110 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்து, உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக ஆனது. இதன்மூலம், சுமார் ரூ. 40,000 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைத்தது. சர்க்கரை ஆலைகளுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தியதாலும், இருப்புச் செலவு குறைந்ததாலும் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை முன்கூட்டியே வசூலிக்க முடிந்தது. 31.10.2022 நிலவரப்படி, 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும், 2021-22 பருவத்துக்கான விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையில் 96% க்கும் அதிகமானவை ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளன.