தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிசம்பர் 4இல் போராட்டத்தை முடிக்கிறோம் - விவசாயிகள் அறிவிப்பு - வேளாண் சட்டங்கள் வாபஸ்

அரசு கோரிக்கையை ஏற்றதால் வரும் நான்காம் தேதி போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

By

Published : Nov 30, 2021, 7:56 PM IST

ஹரியானா மாநிலம் சோனிப்பேட் பகுதியில் 32 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையில் முடிவில், வரும் டிசம்பர் நான்காம் தேதி போராட்டத்தை கைவிட போவதாக விவசாயிகள் தலைவர் சத்னம் சிங் தெரிவித்துள்ளார்.

எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியதால், போராட்டத்தை நான்காம் தேதியுடன் முடித்துக்கொள்கிறோம் என சத்னம் சிங் கூறியுள்ளார்.

அத்துடன், போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர்.

விவசாயிகள் கோரிக்கையை அரசு நாடாளுமன்றத்தில் சட்டங்களை திரும்பப்பெற்ற நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நான்காண்டுகளில் 348 வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் மரணம் - அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details