உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றிருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 22ஆம் தேதி இரவு டெல்லி-ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் தெலுங்கானா திரும்பினார்.
அந்த பயணத்தின் போது விமானத்தில் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை கவனித்த விமான ஊழியர்கள், பயணிகளில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா? என கேட்டனர்.