புதுச்சேரி: தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட உரையைப் படிக்காமல் மாற்றி படித்தது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, 'மக்கள் பிரதி நிதிகளின் சபையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருத்தி, தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி படித்துள்ளார்.
இது இந்திய அரசியலமைப்பிற்கு மிக எதிர்மறையான ஒரு செயல். குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லை. மேலும் அவர் தான்தோன்றித்தனமாக அந்த உரையை படித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மிக தைரியமாக தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றார். அவருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.
ஆளுநர் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட உரையைப் படிக்காமல் மாற்றி படித்ததற்கு தமிழ்நாடு அமைச்சரவை சட்டமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. ஜனநாயக மாண்பைக் காக்கும் வகையில் அந்த தீர்மானம் இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது 2021இல் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கு உரை அனுப்பிய போது அதற்கு காலதாமதம் செய்தார்.