தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துணை குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு - தமிழ்நாடு ஆளுநர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

துணை குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு
துணை குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு

By

Published : Sep 24, 2021, 8:23 PM IST

டெல்லி: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றார்.

பதவியேற்ற போது, "அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்" என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, அவர் செப்டம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து, தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.

இச்சூழலில், நேற்று (செப்டம்பர் 23) காலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இத்தினமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.

நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்குமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தருவார் என நம்புவதாக மாநில மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏழு பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details