புதுச்சேரி: ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை அடுத்த 75 வாரங்களுக்கு பெரும் கொண்டாட்டங்கள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 75ஆவது சுதந்திர தினவிழாவினை கொண்டாடும்பொருட்டு படகு பேரணி, சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
75 படகுகள் பங்கேற்ற படகு பேரணி, 75 மாணவர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். பின்னர், காந்தி திடல் மற்றும் தலைமைசெயலகத்தின் முன்பு மரக்கன்றுகளை நட்டு, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.