புதுச்சேரி: தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் 153ஆவது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மும்மத பிரார்த்தனை, தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
காந்தியடிகள், காமராஜர் சிலைகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை - புதுவை
புதுச்சேரியில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கும் அம்மாநில துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் மகாத்மா காந்தி சிலை
இதேபோன்று காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரின் 46ஆவது நினைவு நாளை ஒட்டி தமிழிசை, ரங்கசாமி, செல்வம், அமைச்சர்கள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை