தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்புமா? - பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டீரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தவ் தாக்ரேவிற்கு உத்தரவு
மகாராஷ்டீரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தவ் தாக்ரேவிற்கு உத்தரவு

By

Published : Jun 29, 2022, 9:19 AM IST

Updated : Jun 29, 2022, 9:59 AM IST

மகாராஷ்டிரா:மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 40 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் நாளை(ஜூன்30) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்ரேவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவிடம் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காரணமாக அம்மாநில அரசியலில் குழப்ப நிலை நிலவுகிறது.

முன்னதாக நேற்று(ஜூன்28) எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பஃட்னாவிஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். மகாராஷ்டிரா அரசுக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என்று தேவேந்திர பஃட்னாவிஸ் தலைமயிலான பாஜக பிரதிநிதிகள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிவிடம் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து நாளை பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"விரைவில் மும்பை திரும்புவோம்" - ஏக்நாத் ஷிண்டே!

Last Updated : Jun 29, 2022, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details