தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

4 மாணவர்களுக்காக 2 ஆசிரியர்களுடன் இயங்கும் அரசுப் பள்ளி... எங்கே தெரியுமா? - அரசு பள்ளி

தெலங்கானாவில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 4 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

4 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளி
4 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளி

By

Published : Jun 23, 2022, 10:03 PM IST

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் , தண்டலப்பள்ளி மண்டலம் அருகே வெமுலாப்பள்ளி பகுதியில் பந்துலு தாண்டா அரசுப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்டதால் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்தது. மேலும் கரோனா பேரிடரின் காரணமாக பள்ளி 3 ஆண்டுகள் மூடப்பட்டதால் ஆசிரியர்களும் மேலும் சில மாணவர்களும் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகிறது. 4 மாணவர்கள் மட்டுமே தினசரி வகுப்புகளுக்கு வந்தாலும் இரண்டு ஆசிரியர்கள் நம்பிக்கை இழக்காமல் அவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். மேலும் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களைச் சந்தித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 மாணவர்களுக்காக 2 ஆசிரியர்களுடன் இயங்கும் அரசுப் பள்ளி... எங்கே தெரியுமா?

இதனிடையே உடல் நலக்குறைவால் ஒரு மாணவர் பள்ளிக்கு வருவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியைச் சந்தித்தார் திரௌபதி முர்மு!

ABOUT THE AUTHOR

...view details