மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ராஜிவ் காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலைக்கு மரியாதை - நாராயணசாமி
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்ள ராஜிவ்காந்தி உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி நினைவு தினம்... தந்தை நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி!