கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை தொடர் சரிவை சந்தித்துவருகிறது. இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கான தடை திரும்பப் பெறப்படுவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வகை வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால், வெங்காய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டது. உள்நாட்டில் சுமூகமான வெங்காய விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்றமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.