தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவரும், தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவருமான முதுபெரும் எழுத்தாளர் கி ராஜநாராயணன் முதுமை காரணமாக நேற்றுமுன் தினம் (மே.17) இரவு புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவரது உடல் அவர் பிறந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மறைவு தமிழுக்கும் கரிசல் இலக்கியத்துக்கும் பெரும் இழப்பாகும்.
’’அரசு மரியாதை எங்கள் தாத்தாவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்’’ - பேத்தி அம்சா பேட்டி!! - அண்மை செய்திகள்
’’தமிழ்நாடு அரசு அளிக்கும் அரசு மரியாதை எங்கள் தாத்தாவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்’’ - உறவினர் கிராவின் பேத்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மகன் வழி பேத்தி அம்சா கூறுகையில் ’’எங்கள் தாத்தாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக அவர் பிறந்த இடைசெவல் கிராமத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். இந்நிலையில், உடல் நலிவுற்று இயற்கை எய்திவிட்டார். எங்கள் தாத்தா கி. ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு எழுத்தாளருக்கு அரசு மரியாதை என்ற முறையிலும் தமிழ்நாடு அரசு அளிக்கும் முதல் அரசு மரியாதை எங்கள் தாத்தாவுக்கு கிடைத்துள்ளதையும் நாங்கள் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.
இதையும் படிங்க: வலுவிழந்தது 'டவ்- தே' புயல்: புயலால் குஜராத்தில் 13 பேர் உயிரிழப்பு!