அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவுநாளான இன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு குழுமியிருந்த தொண்டர்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில், "அனைத்து அரசு கட்சிகளும் அண்ணல் அம்பேத்கரின் புகழை மறைத்து இருட்டடிப்பு செய்துவந்தன.
ஆனால், தற்போது தங்களின் அரசியல் ஆதாயம் காரணமாக அவருக்கு போலி மரியாதை செலுத்திவருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் மீதான கொடுமைகள் தொடர்ந்துவருகிறது.
அவர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஆனால், பாஜக அரசு தேர்தலுக்கு முன்னரே வெற்றிப் பேரணியை மேற்கொண்டுவருகிறது. சமாஜ்வாதி கட்சி மீண்டும் அராஜக அரசியலை கையிலெடுத்துவருகின்றன. சந்தௌலி பகுதியில் காவல்துறையினரையே சமாஜ்வாதி கட்சியினர் தாக்கியுள்ளனர்.
வரும் சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். பஞ்சாப்பில் அகாலி தளம், பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்" என்றார்.
இதையும் படிங்க:ராணுவத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் காலியிடங்கள் - மாநிலங்களவையில் அரசு தகவல்