தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வளர்ந்து வரும் மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் - மத்திய அமைச்சர் தகவல் - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடு முழுவதும் ஆர்வத்துடன் வளர்ந்து வரும் 40 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

new medical colleges
new medical colleges

By

Published : Feb 5, 2022, 6:40 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் நாட்டின் சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அதில், நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவரும் புதிய மருத்துவ கல்லூரிகளின் நிலவரம் குறித்து கூறினார். அதன்படி, நாடு முழுவதும் 157 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 157இல், 40 கல்லூரிகள் நாடு முழுவதும் ஆர்வத்துடன் வளர்ந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுகின்றன. மொத்தம், 157இல் 70 கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த புதிய கல்லூரிகள் 16 மாநிலங்களைச் சேர்ந்தவை. இதுவரை எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகளிலேயே இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:உ.பி தேர்தலில் அகிலேஷ் கட்சிக்கே ஆதரவு - சீதாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details