சான் பிரான்சிஸ்கோ :சிறு வணிகர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருளினை கூகுளில் விற்பனை செய்யவும் விளம்பரப்படுத்தவும் ஏதுவாக புதியவ சதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், சிறு வணிகர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருளினை செயற்கை நுண்ணறிவு மூலம் மதிப்பு கூட்டி அதை இணையதளத்தில் காட்சிப்படுத்தி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதற்கு உதவியாக தனி மென்பொருளை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் கூகுள் அல்லது கூகுள் மேப்ஸ் மூலம் எதையாவது தேடும் போது சிறு வணிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உதவும் எனக் கூறப்படுகிறது. வணிகர்களால் விற்கப்படும் பொருளினை வாடிக்கையாளர்கள் கூகுள் மேப்ஸ் அல்லது தேடு பொறியில் தேடும் போது சிறு வணிகம் என்ற லேபில் குறிப்பிடப்படிருக்கும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருளினை சிறு வணிகர்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியினையும் அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த லேபில்கள் வாடிக்கையாளரின் தேடலைக் குறைத்து பிடித்தவற்றை விரைவாக வாங்க உதவும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கூகுளில் உள்ள product studio என்ற மென்பொருளானது வாடிக்கையாளர்கள் தேடும் பொருளினை அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப, சிறு வணிகர்கள் தயாரித்த பொருளினை செயற்கை நுண்ணறிவு மூலம் மதிப்புக் கூட்டி கற்பனைக்கு ஏற்றவாறு கலர், வடிவமைப்பு போன்றவற்றை மாற்றி வாடிக்கையாளருக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது. இந்த சோதனையில் AI இயங்கும் காட்சிகளை உருவாக்கும் அம்சமும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மாதம் முதல், குறிப்பிட்ட நாடுகளில், சில்லறை விற்பனையாளர்கள் தேடலில் தோன்றும் அறிவுக் குழுவானது (knowledege panel) வணிகத்தின் தலைமையகம் இருக்கும் இடம் அல்லது பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைக் காட்டி உள்ளது. கூகுள் நிறுவனத்தின், அறிவுக் குழு அதிகப்படியான வணிகர்களைக் காட்டும் எனவும், சிறு வணிகர்களுக்கு பயனுள்ள புகைப்படத்தை வாடிக்கையாளரின் பார்வைக்கு காட்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் வணிக மையத்தில் பகிர்ந்து உள்ள வணிகர்களின் தகவல்களை வாடிக்கையாளருக்கு காட்சிப்படுத்துவோம் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க:இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை?