தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆப் மூலம் கடன் வாங்கும் நண்பர்களே உஷார்! முதல்ல இத படிங்க! - உளவு கடன் செயலிகள்

Google removes 17 SpyLoan apps in Play Store: தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளை குறிவைத்து நடத்தப்பட்ட 17 போலி உளவு கடன் மோசடி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 6:38 PM IST

ஐதராபாத் :வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கடன் வழங்குவதாக கூறி உளவு பார்ப்பது உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டதாக 17 உளவு கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வட்டி இல்லா கடன், சிறுகடன், தனிநபர் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் லோன் வழங்கப்படும் என்பது குறித்த கடன் செயலிகளின் விளம்பரங்கள் அதிகம் தென்பட்டன. கடன் தேவைப்படுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக லட்சக்கணக்கான ரூபாய் வரை எந்தவித சட்டபூர்வமான பரிசீலனையும் இன்றி கான் வழங்குவதாக கூறப்படுகிறது.

கடன் பெறும் வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் ரகசிய தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி, இந்த கடன் செயலிகள் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கடன் செயலிகளின் மாய வலையில் சிக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொது மக்கள் விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்லோவாக்கை சேர்ந்த மென் பொருள் நிறுவனம் அளித்த தரவுகளின் அடிப்படையில் பல்வேறு உளவு கடன் மோசடியில் இருக்கும் செயலிகளை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ஏறத்தாழ 17 போலி உளவு கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூகுள் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இந்த போலி உளவு கடன் செயலிகளை ஏறத்தாழ 12 லட்சம் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போலி உளவு கடன் செயலிகள் AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCredit, Cashwow, CrediBus, FlashLoan, PréstamosCrédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, and EasyCash என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போலி உளவு கடன் செயலிகள் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளை குறிவைத்து தனது திட்டத்தை செயல்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து - 6 பேர் பரிதாப பலி!

ABOUT THE AUTHOR

...view details