தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
கடின உழைப்பினால், 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வு பெற்றார். கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் தலைமை செயல் அலுவலராகவும் (சிஇஓ) ஆகவும் பதவி வகித்து வருகிறார்.
48 வயதான இவருக்கு, 2019ஆம் ஆண்டிலே ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,136 கோடி) வழங்கப்பட்டது. எனவே, தற்போது சம்பளம் இரட்டிப்பு ஆகியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
சுந்தர் பிச்சையின் சொத்தின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டாலர் ஆகும் எனக் கூறப்படுகிறது. சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலியைச் சந்தித்தார்.