தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழில் அறிமுகமாகும் கூகுள் ஏஐ பார்ட்... 40 மொழிகளில் அறிமுகம் !

இந்தியாவின் 9 மொழிகள் உள்பட சர்வதேச அளவில் புதிதாக 40 மொழிகளில் பார்ட் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்றும், பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு அப்டேட்கள் பார்ட் ஏஐயில் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Bard
Bard

By

Published : Jul 13, 2023, 4:21 PM IST

டெல்லி : தமிழ் உள்பட இந்தியாவின் 9 மொழிகளிலும், சர்வதேச அளவில் 40 புதிய மொழிகளில் கூகுல் நிறுவனத்தின் பார்ட் செயற்கை நுண்ணறிவு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி உள்ள செயற்கை நுண்ணறிவு கடந்த ஆண்டு முதலே பல்வேறு மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கி உள்ளன. ஒருபுறம் செயற்கை நுண்ணறிவுக்கு ஆதரவு குரல் எழுந்தாலும் மறுபுறம் அதனால் மனித குலத்திற்கு பேராபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஓபன் ஏஐ என்ற நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற செயற்கை நுண்ணறிவை உருவாக்கியது. கூகுள் தேடுபொறியின் அடுத்தக் கட்டமாக காணப்பட்ட சாட் ஜிபிடியில் பல்வேறு கேள்விகளுக்கு நொடிப் பொழுதுகளில் பதில் கிடைக்கூடியதாக இருந்தது.

நொடிக்கு 99 ஆயிரம் தேடல்களை செயல்படுத்துவது, நாளொன்றுக்கு 850 கோடி தேடல்களை செயலாக்கம் செய்வது என தேடுபொறி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வந்த கூகுள் நிறுவனத்திற்கு, சாட் ஜிபிடி பேரடியை தரத் தொடங்கியது. சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் களமிறக்கிய செயற்கை நுண்ணறிவு தான் பார்ட் (Bard).

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறக்கப்பட்ட பார்ட் செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது. பார்ட் செயற்கை நுண்ணறிவின் பின்னடைவால் கூகுள் நிறுவனத்தின் பங்குகள் சரிவை காணத் தொடங்கின. இந்நிலையில் பல்வேறு செயலாக்கப் பணிகளுக்கு பின் பார்ட் செயற்கை நுண்ணறிவை புதுப் பொலிவுடன் கூகுள் நிறுவனம் களமிறக்கி உள்ளது.

பார்ட் செயற்கை நுண்ணறிவில் அடிக்கடி கூகுள் நிறுவனம் அப்டேட்களை கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவின் 9 மொழிகள் உள்பட சர்வதேச அளவில் 40 மொழிகளில் பார்ட் செயற்கை நுண்ணறிவு கிடைப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, உருது, இந்தி ஆகிய 9 இந்திய மொழிகளில் பார்ட் செயற்கை நுண்ணறிவு கிடைப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேபோல், பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் பார்ட் செயற்கை நுண்ணறிவு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் ஏறத்தாழ 230 நாடுகளில் பார்ட் செய்ற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பயனர்கள் தங்களது அனுபவத்தை சிறப்பாக தனிப் பயனாக்குவதற்கும், படைப்பாற்றலை அதிகரிப்பதற்கும், பார்ட் செய்ற்கை நுண்ணறிவின் பதில்களை சத்தமாக கேட்பது மற்றும் பதில்களை எளிதாகவும், நீளமாகவும், குறுகியதாகவும் மாற்றும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்களையும் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கூகுள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பயனர்கள் இன்று முதல் 40 மொழிகளில் பார்ட் செயற்கை நுண்ணறிவின் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பயனர்கள் ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பைக் கேட்க விரும்பும் போது அல்லது கவிதை அல்லது கதையை கேட்க விரும்பும் போது இந்த வசதி உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பார்ட் வழங்கும் பதில்கலின் பாணியை 5 வெவ்வேறு வகையில் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது. எளிய, நீண்ட, குறுகிய, தொழில்முறை அல்லது சாதாரண ஆகிய வகைகளில் பார்ட் கூறும் பதில்கலின் தோனி அல்லது பாணியை மாற்றிக் கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க :Chandrayaan-3 : ஒருநாள் நிலவு ஆராய்ச்சிக்கு இத்தனை கோடி செலவா? சந்திரயான்-3 முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details