டெல்லி:கரோனா பாதித்தவர்களிடம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சையின் தாக்கம் குறித்து, ஐஐடி டெல்லி மற்றும் ஹரித்துவாரில் உள்ள தேவ சமஸ்கிருத பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி நடத்தியது.
இந்த ஆராய்ச்சி மோசமான கரோனா பாதிப்பு இருந்த 30 நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. இதில், யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை, கரோனா பாதிப்பை விரைவாக குணப்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் பயம், பதற்றம் உள்ளிட்டவற்றையும் ஆயுர்வேத சிகிச்சை குறைக்கிறது எனத் தெரியவந்துள்ளது.