சித்தி மாவட்டம்(மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் சோன் காரியல் சரணாலயத்தில் 72 முட்டைகளில் இருந்து 72 முதலைகள் பிறந்துள்ளன. அவற்றைக் கண்காணிக்க, 6 சரணாலய ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண் முதலமைகள் சோன் ஆற்றின் கரையில் உள்ள மணலில் முட்டையிடுகிறது. முட்டைகளைப் பாதுகாக்க,சரணாலய நிர்வாகம் இடம் தயார் செய்தது. இதன்மூலம் முதலைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லலாம்.
இத்தகைய சூழ்நிலையில், இரண்டு பெண் முதலைகளும் தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக முட்டைகளைச் சுற்றி, சுற்றி வருகின்றன. இரு தரப்பிலிருந்தும் கேடயமாக மாறி தனது குட்டிகளைக் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
சிறிய முதலைகளுக்கு இயற்கையாகவே இரண்டு வாரங்களுக்கு உணவு தேவையில்லை. அதன் பிறகு அவர்களுக்கு சிறிய மீன்கள் உணவாக கொடுக்கப்படுகின்றன.