தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Good Friday : புனித வெள்ளி ஏன் அனுசரிக்கப்படுகிறது?

தவக்காலத்தின் கணத்த நாளான புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை மூன்று மணி நேர வழிபாட்டுடன் கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர்.

Good Friday
Good Friday

By

Published : Apr 7, 2023, 9:42 AM IST

ஐதராபாத் :தவக்காலத்தின் மிக கணத்த நாளான புனித வெள்ளி இன்று (ஏப் 7) அனுசரிக்கப்படுகிறது. மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளின் படி இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம் சீடர்களுடன் கடைசியாக உணவருந்திய நாள் புனித வெள்ளி. இதை பாஸ்கா என்றும் அழைக்கப்படுகிறது.

இயேசுவின் மரணமான புனித வெள்ளி யூத நாட்காட்டியில் நிசான் 15 ஆம் தேதி என்றும் கிரிகோரியன் நாட்காட்டியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரும் என்று குறிக்கப்பட்டு உள்ளது. இயேசு கிறிஸ்து மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து எந்த தீங்கும் செய்யாமல் உலக மக்களின் பாவங்களுக்காக தன்னை மரணத்திற்குள்ளாக்கிக் கொண்டார்.

மக்களின் பாவங்களுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துவர்கள் மனம் வருந்து இன்று தொடர் ஆராதனைகளில் ஈடுபட்டும், இயேசுவின் பாடுகளை நினைவு கூறுகின்றனர்.

இன்றைய நாளில் எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகினற்ன. உண்ணா நோன்பிருக்கும் கிறிஸ்தவர்கள், சிலுவை பாதை உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். நண்பகல் வேளையில் சிலுவவையில் இரத்தம் சொட்டச் சொட்ட தனது இன்னுயிரை இயேசு கிறிஸ்து துறந்ததாக கூறப்படும் நிலையில் அந்நேரத்தில் கிறிஸ்தவர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபடுவர்.

இறந்த இயேசுவை குறிக்கும் வகையில் தேவாலயங்களில் மரித்த இயேசுவின் சொரூபங்கள் வைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் ஜெப பிரார்த்தனையில் ஈடுபடுவர். புனித வெள்ளி என்பது இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் மனதில் அசை போட்டு, பாவங்களை விட்டும் மனமாறும் நாள் கருத்தில் கொள்ளப்படுகிறது.

பாவங்களை விட்டு மனமாறி இயேசுவின் வழியில் வாழ வேண்டும் என்பதையே புனித வெள்ளி வெளிப்படுத்துகிறது. அதையே இன்றைய நாளும் வலியுறுத்துகிறது. புனித வெள்ளி என்றால் தவம், கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் புனிதமான நாள். புனித வெள்ளியை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் நாளாகும். மரித்த இயேசு கிறிஸ்து மூன்றாம் உயிர்த்தெழுவதை குறிக்கும் நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க :கூர்நோக்கு இல்ல சிறுவர்களின் பாதங்களை கழுவிய போப் பிரான்சிஸ்!

ABOUT THE AUTHOR

...view details