மும்பை: மகாராஷ்ரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கென்யாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பெண் பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது உள்ளாடைகள், மசாலா பாட்டில்கள், காபி பாட்டில்களில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காபி பாட்டிலில் கடத்திவரப்பட்ட 3.8 கிலோ தங்கம் - மும்பை விமானநிலையத்தில் பாட்டிலில் தங்கம்
மும்பை விமான நிலையத்தில் காபி பாட்டில் மூலம் கடத்திவரப்பட்ட 3.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
![காபி பாட்டிலில் கடத்திவரப்பட்ட 3.8 கிலோ தங்கம் coffee bottle gold in Mumbai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13962090-thumbnail-3x2-gold.jpg)
coffee bottle gold in Mumbai
உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட தகவலில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 3.8 கிலோ என்பதும் அவற்றின் விலை சுமார் 1.5 கோடி இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் ரூ 3.6 கோடி மதிப்புள்ள 7.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குஜராத்தில் தொடரும் போதைப்பொருள் கடத்தல்: ரூ. 400 கோடி ஹெராயின் பறிமுதல்