தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்கும் கோடிகள்: அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து மேலும் ரூ.27.9 கோடி பறிமுதல் - Arpita Mukherjee apartment

மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டிலிருந்து ரூ.27.9 கோடி ரொக்கம், ரூ.4.31 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

gold-rs-28-crore-in-cash-found-at-apartment-linked-to-bengal-minister
gold-rs-28-crore-in-cash-found-at-apartment-linked-to-bengal-minister

By

Published : Jul 28, 2022, 12:11 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் ஊழல் செய்யப்பட்டிருப்பதாக மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மீது புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் அமலாக்கத்துறை அலுவர்கள் ஆதாரங்களுடன் பார்த்தா சட்டர்ஜி கடந்த வாரம் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் சட்டர்ஜியின் நெருங்கிய தோழியான பாடகியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணத்தையும், ரூ.79 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமாக பெல்காரியாவில் உள்ள மற்றொமொரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூலை 27) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.27.9 கோடி ரொக்கம், ரூ.4.31 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ரூ. 50 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகை அர்பிதா முகர்ஜியை ஒரு நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details