அமராவதி:கடலில் பலவிதமான அரிய வகை மீன்கள் வசித்துவருகின்றன. அத்தகைய மீன்களைப் பிடிக்கும் மீனவர்களுக்கு அன்றைய நாள் பணமழைதான். அத்தகைய அதிர்ஷ்டம்தான் ஆந்திர மீனவர்களுக்கு நேற்று கிடைத்துள்ளது. ஒற்றை மீனால் லட்சாதிபதியாகியுள்ளனர்.
கடல் தங்க மீன்
கிழக்கு கோதாவரியில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த கரே சிங்கராஜு என்பவர், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, கச்சிலி (கடல் தங்க மீன்) என்ற மீன் அவரது வலையில் சிக்கியுள்ளது.
ரூ.2 லட்சத்துக்கு ஏலம்
அது மிகவும் விலை உயர்ந்த மீன் என்பதால், கரைக்கு வந்த அவர், ஆர்வமாக ஏலம்விட்டார். யாரும் எதிர்பாராதவகையில், அந்த ஒற்றை மீன் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
கச்சிலி கிடைச்சா அதிர்ஷ்டம்தான்
அதேபோல, கும்பாபிஷேகம் கடலோரப் பகுதியில் மீனவர் மேருகா ஜெகநாத்திடமும் கச்சிலி சிக்கியுள்ளது. அந்த மீன், இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஏலம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடல் தங்க மீன், ஆழ்கடல் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுவதால், வணிக ரீதியாக சந்தையில் அதன் தேவை அதிகளவில் உள்ளது.
இதையும் படிங்க:எஜமானியுடன் துணி துவைத்து மடித்து வைக்கும் செல்லப்பிராணி நாய்: வைரல் காணொலி!