தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓய்வுபெறும் வயதில் திருமணம் செய்து கொண்ட நீதிபதி

கால்நடை வளர்ப்பு ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு யாதவுக்கு தண்டனை விதித்து, பிரபலமாக அறியப்பட்ட நீதிபதி ஷிவ்பால் சிங், ஓய்வுபெறும் வயதில் கோடா நீதிமன்றத்தில் வழக்கறிஞரை மணந்தார்.

ஓய்வு பெரும் வயதில் திருமணம் செய்து கொண்ட நீதிபதி
ஓய்வு பெரும் வயதில் திருமணம் செய்து கொண்ட நீதிபதி

By

Published : Sep 5, 2022, 7:28 PM IST

கோடா(ஜார்க்கண்ட்): கால்நடை வளர்ப்பு ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை விதித்த நீதிபதி ஷிவ்பால் சிங், பாஜகவைச் சேர்ந்தவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவியுமான நூதன் திவாரியை, தும்கா பாசுகிநாத் தாமில் திருமணம் செய்தார். அத்திருமணம் தும்கா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

நீதிபதி ஷிவ்பால் சிங்கின் வயது 64, இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறப்போகிறார். இப்படிப்பட்ட நிலையில், ஓய்வு பெறும் வயதில், அவரது இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அவர் கோடா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதே நேரத்தில், நூதன் திவாரி கோடா நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு கோடா நகரசபையின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இதனுடன், பாஜக மாநிலக் குழு உள்ளிட்ட பல மாநில அளவிலான பதவிகளை வகித்துள்ளார். நூதன் திவாரியின் வயது 50. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது, இந்நிலையில் இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார்.

அதே நேரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூர் குர்த் கிராமத்தில் வசிக்கும் நீதிபதி ஷிவ்பால் சிங்கிற்கும் முழுக்குடும்பம் உள்ளது. இவரது மனைவி 2006இல் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்...! - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details