கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து சில மாநிலங்கள் படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகின்றன. அந்த வகையில் உத்திரப் பிரதேசத்தில் அமலில் இருக்கும் இரவுநேர ஊரடங்கு உத்தரவில் இரண்டு மணி நேரம் தளர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வார நாள்களில் இரவு ஒன்பது மணி வரை கடைகள், மால்கள், உணவகங்களைத் திறக்கவும் அனுமதிக்கிறது. அதேபோல் திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.