பனாஜி: பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து கோவா மாநிலத்தின் ஆம் ஆம்தி முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதன்படி, பண்டாரி சமூகத்தை சேர்ந்த அமித் பலேகர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநில அரசுக்கு எதிராக அமித் பலேகர் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், அவருக்குச் சாதகமாக அமைந்தது. மேலும் அவருக்குப் பெரும் செல்வாக்கை பெற்றது.
முன்னதாக, பழைய கோவாவின் பாரம்பரிய தளத்தை காப்பாற்ற பலேகர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அந்த இடத்தில் சட்டவிரோத கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.