டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவின் அசாகோவில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு இறந்தவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டதாகவும், மதுபான உரிமையைப் புதுப்பிக்க ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.
இதுகுறித்து கோவாவின் கலால் ஆணையர் நாராயண் எம்காட், ஜூலை 21ஆம் தேதி உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பான வழக்கு ஜூலை 29 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே ‘இந்த விவாகரத்தில் பிரதமர் தலையிட்டு, சட்ட விரோதமாக மகள் பெயரில் மதுப்பானக்கடை (பார்) நடத்தும் அமைச்சர் ஸ்மிருதி ராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துவந்தது.