டெல்லி: கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் (Go First Airlines) நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்களிலிருந்து மேல்மட்ட ஊழியர்கள் வரை சுமார் 4,200 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் தனது செயல்பாட்டின் மூலம், 2021-2022 நிதியாண்டின் மொத்த வருவாயாக ரூ. 4,183 கோடி பணமதிப்பைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிலையில், கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களின் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகளிடையே அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அறிக்கைகள் வந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "தவிர்க இயலாத செயல்பாட்டுக் காரணங்களால், ஆகஸ்ட் 31 வரை திட்டமிடப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். மேலும், கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கவும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய http://shorturl.at/jlrEZ என்ற இனைய முகவரியை நாடவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.