புதுச்சேரி திப்புராயபேட்டையைச் சேர்ந்தவர், திப்லான். முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தாவீத், கவுசிக் பாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
கடந்த வாரம் திப்லானின் பிறந்தநாள் அன்று அவரது கல்லறையில் நண்பர்கள் கூடினர். அப்போது, திப்லானின் குழந்தையின் கையில் பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்டினர்.