தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்... மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்... - தேசிய மனித உரிமைகள் ஆணையம்

ராஜஸ்தானில் 500 ரூபாய்க்கு பெண்கள் ஏலம் விடுவது தொடர்பாக அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்.. மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்..
ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்.. மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்..

By

Published : Oct 30, 2022, 6:56 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “ராஜஸ்தான் மாநிலத்தில் பொருளாதார சிக்கல்களால் நலிவடைந்து இருக்கும் நபர்கள் பெறும் கடன்களை பல்வேறு காரணங்களால் அவர்களால் அவர் செலுத்துவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கிராமப்புறங்களில் சாதிப் பஞ்சாயத்துகள் வைக்கப்பட்டு, அதில் கடன் பெற்றவரின் குடும்பத்தில் உள்ள இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை ஸ்டாம்ப் பேப்பரில் 500 ரூபாய்க்கு ஏலம் விடும் அவலம் தொடர்கிறது.

இவ்வாறு கடன் பெற்றவரின் வீடுகளில் இளம்பெண்கள் இல்லையெனில், அவரின் (கடன் பெற்றவர்) மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். இது நவீன இந்தியாவிற்கே வெட்கக்கேடானது. இதுதொடர்பான விசாரணையை முடுக்கி, கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணைய தலைவி ரெஹானா ரியாஸ் கூறுகையில், ​​“பெண்களை 500 ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பரில் ஏலம் விடுவது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்தேன்.

இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறுமிகளுக்கு நீதி வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்” என்றார். இந்நிகழ்விற்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சங்கீதா பெனிவாலும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், “டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பும் முன், முதலில் ராஜஸ்தான் காவல்துறையிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பேசியிருக்க வேண்டும். இது அரசியல் பிரச்னை அல்ல. விசாரணை நடக்கும் வரை உண்மையை அறிய முடியாது" என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோட் கூறுகையில், “ராஜஸ்தான் அரசுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த மகள்களை விற்பதை விட வெட்கக்கேடானது வேறு என்ன இருக்க முடியும்? ராஜஸ்தானில் பாலியல் அடிமைத்தன சம்பவங்கள் காங்கிரஸின் கீழ் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன. இந்த விவகாரம் சட்டசபைக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

இதையும் படிங்க:16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாய், மகன் உள்ளிட்டோர் கைது

ABOUT THE AUTHOR

...view details