உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் காதலரின் திருமணம் முடிவு செய்யப்பட்டதையடுத்து, காதலி தனது காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். அந்த இளைஞன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உபியில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு - Hari Parbat Police Station
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காதலி தனது காதலன் மீது ஆசிட் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தேவேந்திரா, குற்றம் சாட்டப்பட்ட சோனம் ஆகியோர் நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிக்கந்திரா காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டிற்கு, பெண் விசிறியை சரிசெய்ய காதலரை அழைத்துள்ளார். அப்போது, ஆசிட் வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்ச்கஞ்சைச் சேர்ந்த தேவேந்திராவும், குற்றம் சாட்டப்பட்ட சோனமும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியது விசாரணையின்போது தெரியவந்துள்ளது. ஹரிபர்பத் காவல்துறையினர் சோனமை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.