சண்டிகர்:பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி தீபக் டினுவின் காதலி ஜிதிந்தர் கவுர் என்ற ஜோதி தியோல் மும்பை விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு தப்பியோட இருந்த நிலையில், பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக முக்கிய கொலைக்குற்றவாளியான ரவுடி தீபக் டினு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி காவல்துறை பாதுகாப்பில் இருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து டிஜிபி கவுரவ் யாதவ் அவரது ட்விட்டரில், ‘தப்பியோடிய தீபக் டினுவின் காதலியை உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து காவல்துறை கைது செய்தது’ எனக் கூறினார்.
ஜோதி தியோலுக்கு போலீஸ் காவல்: இதனையடுத்து மான்சா நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட தீபக் டினு மற்றும் ஜஸ்பிரீத் கவுர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் இருவரையும் 5 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குப்பின் மீண்டும் வரும் 14ஆம் தேதி ஆஜர்படுத்தபடவுள்ளனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜோதி தியோல், பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தின் கந்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் எனத்தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சித்து மூஸ்வாலா கொலை வழக்கு - கேங்ஸ்டர் தீபக் தினு போலீஸ் காவலில் இருந்து தப்பியதாக தகவல்!