தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் காதலனுடன் சேருவதற்காக எச்ஐவி ரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அஸ்ஸாம் மாநில செய்திகள்

அஸ்ஸாமில் காதலனுடன் சேருவதற்காக எச்ஐவி ரத்தத்தை ஊசி மூலம் சிறுமி தனது உடலில் செலுத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாமில் காதலனுடன் சேருவதற்காக எச்ஐவி ரத்தத்தை செலுத்திக் கொண்ட சிறுமி
அஸ்ஸாமில் காதலனுடன் சேருவதற்காக எச்ஐவி ரத்தத்தை செலுத்திக் கொண்ட சிறுமி

By

Published : Aug 5, 2022, 7:56 PM IST

அஸ்ஸாம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். சிறுமியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவர இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர்.

அதில் இளைஞருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் சிறுமி இளைஞருடன் மூன்று முறை வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து இருவரையும் தேடிப் பிடித்து வந்த சிறுமியின் பெற்றோர் ஒருகட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அந்த சிறுமி, தனது காதலனுடன் இருக்கும்போது அவரது ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டதாகவும், காதலனுடன் சேருவதற்காக இதனை செய்ததாகவும் போலீசாரிடம் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதோடு தான் இதை விருப்பப்பட்டு செய்ததாகவும் தனது காதலன் நிரபராதி எனவும் அவரை விடுவிக்க கோரியும் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details