தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலை காட்டிக் கொடுத்த அக்கா... போட்டுத்தள்ளிய தங்கை - கேரளாவில் அக்காவை கொன்ற தங்கை

கேரள மாநிலத்தில் காதல் விவகாரத்தை வீட்டில் காட்டிக்கொடுத்த அக்காவை, கொடூர முறையில் தங்கை கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை அளித்துள்ளது.

girl murdered her own sister  girl murdered her own sister because of love issue  girl murdered her own sister in kerla  அக்காவை கொன்ற தங்கை  கேரளாவில் அக்காவை கொன்ற தங்கை  காதல் விவகாரத்தால் அக்காவை கொன்ற தங்கை
அக்காவை கொன்ற தங்கை

By

Published : Dec 31, 2021, 7:58 PM IST

கேரளா: பரவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஸ்மயா, ஜித்து சகோதரிகள். கடந்த 21ஆம் தேதி இவர்களது பெற்றோர் இருவரும் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் விஸ்மயாவும், ஜித்துவும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.

பின்னர் பெற்றோர் வீடு திரும்பியபோது, மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இளைய மகளும் காணவில்லை. இதனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காதலால் நடந்த விபரீதம்

இந்தப் புகாரை அடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஜித்துவை தேடிவந்தனர்.

பின்னர் காக்கநாடு பகுதியிலிருந்த அவரை, காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

அதாவது, ஜித்து ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த விஸ்மயா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அக்கா மீது ஜித்து கோபத்திலிருந்து வந்துள்ளார். தனது காதலைக் கெடுத்துவிட்டதால் வீட்டில் தனியாக இருந்தபோது விஸ்மயாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயினை எடுத்து அக்காவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து ஜித்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் ஜித்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: GOLD THEFT - நகைப் பட்டறையில் நகை, பணம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details