தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டியூசன் ஆசிரியரை திருமணம் செய்த மாணவி ; மிரட்டல் விடும் பெற்றோர் - Student teacher lover affair

டியூசன் ஆசிரியரையே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவியின் பெற்றோர் அந்த ஜோடிக்கு தொடர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

டியூசன் ஆசிரியரை திருமணம் செய்த மாணவி ; மிரட்டல் விடும் பெற்றோர்
டியூசன் ஆசிரியரை திருமணம் செய்த மாணவி ; மிரட்டல் விடும் பெற்றோர்

By

Published : Dec 20, 2022, 8:04 AM IST

பெட்டியா: தன்னுடைய காதல் திருமணத்தை தனது பெற்றோர்கள் தடுப்பதாக, டியூசன் ஆசிரியரைத் திருமணம் செய்துகொண்ட பீகாரைச் சேர்ந்த ஓர் மாணவியின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஞ்சலி குமாரி(21) எனும் இந்த மாணவி, தனது டியூசன் ஆசிரியரான சந்தன் குமார்(27) என்பவரை தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் காதல் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அம்மாணவி வெளியிட்ட காணொலியில், என் பெயர் அஞ்சலி குமாரி. நானும் எனது டியூசன் ஆசிரியர் சந்தன் குமாரும் காதலித்துவந்த நிலையில் டிச.12ஆம் தேதி விட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டோம்.

இதனையறிந்த எனது தந்தை என் கணவரை சுட்டுக்கொன்றுவிடுவேன் என்றும், அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார். அப்படி நடந்ததால் சட்டப்படி வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவியான அஞ்சலி, மிஸ்ரௌலி சௌக்கில் உள்ள சந்தனின் கோச்சிங் சென்டருக்குச் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். பட்டப்படிப்பை முடித்த சந்தன் இந்த கோச்சிங் சென்டரை நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

இதையும் படிங்க:அரிய நோயால் தவித்த வங்கதேச குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் சாதனை

ABOUT THE AUTHOR

...view details