பில்வாரா :ராஜஸ்தானில் மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்து சக மாணவர்கள் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் லுஹாரியா கிராமத்தை சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது தனது தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறுமி பருக முயன்ற போது அதில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமியின் பையில் சக மாணவர்கள் காதல் கடிதம் வைத்திருந்ததாக சிறுமி தெரிவித்து உள்ளார். பின்னர் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததாக சிறுமி தெரிவித்து உள்ளார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறுமி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.