தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹேண்ட் ரைட்டிங் நல்லா இல்லா... 2ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது... - teacher accused held

டெல்லியில் ஹேண்ட் ரைட்டிங் நன்றாக இல்லாததை காரணம் காட்டி 2ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Girl injured in her eye after allegedly beaten by teacher accused held
Girl injured in her eye after allegedly beaten by teacher accused held

By

Published : Aug 25, 2022, 7:29 PM IST

டெல்லியின் நொய்டாவில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமித். இவர் நேற்று (ஆகஸ்ட் 24) இரண்டாம் வகுப்பு மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளை சரிபார்த்தார். அப்போது ஷாலு என்னும் மாணவியின் நோட்டை பார்த்து, ஹேண்ட் ரைட்டிங் நன்றாக இல்லை என்றுக் கூறி தான் வைத்திருந்த குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவின் இடது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது.

அதன்பின் சிறுமி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் அமித் மீது போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல ஆசிரியர் அமித் பல மாணவர்களை அடித்து துன்புறுத்திதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அமித்தை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details