பீகார்: பாட்னாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கையை துண்டிக்க வேண்டிய சோகம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் ஷியோஹர் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 20 வயது பெண் ரேகா தனது உறவினருடன் காதில் பிரச்சனை இருப்பதாக கூறி மஹாவீர் ஆரோக்கிய சன்ஸ்தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை ஜூலை 11 அன்று காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பிறகு அங்குள்ள மருத்துவர் பரிந்துரைத்த ஊசியை செவிலியர் ஒருவர் கொடுத்துள்ளார். இதையடுத்து ரேகாவுக்கு இடது கையில் பிரச்சனை ஏற்பட்டது. கையின் நிறம் பச்சையாக மாற ஆரம்பித்தது, கை சரியாக வேலை செய்யவில்லை.
இதையடுத்து அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் இது குறித்து புகார் அளித்தும் யாரும் செவிசாய்க்கவில்லை. நீண்ட நேரம் கழித்து டாக்டர்கள் பார்த்தபோது சரியாகிவிடும் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் ரேகாவின் உறவினர் அவரை பல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் பெரும்பாலான மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை, ஒரு சில மருத்துவமனைகளில் ரேகாவின் கையை வெட்டி எடுத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
பின்னர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் அவரின் இடது கையை வெட்டி மருத்துவர்கள் ரேகாவின் உயிரை காப்பாற்றினர். இந்நிலையில் கன்கர்பாக்கில் அமைந்துள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானின் அங்கீகாரத்தை ரத்து செய்து சிறுமிக்கு நீதி கோரி சிறுமியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:குழந்தை கடத்தல்காரன் என நினைத்து சந்தேகத்திற்குரியவரைத் தாக்கிய ஊர்மக்கள் - பரிதாபமாக உயிரிழப்பு